/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைபாதையில் மக்னா யானை உலா; முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை
/
மலைபாதையில் மக்னா யானை உலா; முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை
மலைபாதையில் மக்னா யானை உலா; முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை
மலைபாதையில் மக்னா யானை உலா; முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை
ADDED : ஜூலை 24, 2025 08:13 PM

குன்னுார்; குன்னுார் மலைப்பாதையோரத்தில், மக்னா யானை உலா வருதால் முன்னெச்சரிக்கையுடன் வாகனங்கள் இயக்க வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், 12க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உலா வருகின்றன. அதில், ஹில்குரோவ், வடுகதோட்டம் பகுதிகளில் உலா வந்த மக்னா யானை தற்போது மலை பாதையில் கே.என்.ஆர்., மற்றும் ஆறாவது, ஏழாவது கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் உலா வருகிறது. இந்த யானையின் காது ஏற்கனவே கிழிந்து தொங்கிய நிலையில் உள்ளது. இதே போல குரும்பாடி அருகே, கொம்பன் யானை உலா வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'சாலையோரம் அடிக்கடி சாந்தமாக நிற்கும் இந்த யானைகளை, யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என் றனர்.