தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/‘ அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்’

‘ அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்’

‘ அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்’


UPDATED : நவ 01, 2026 07:51 PM

ADDED : நவ 01, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 07:51 PM ADDED : நவ 01, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னூர்: குன்னூர் காட்டேரி பூங்கா தோட்டக்கலை அரங்கில் வண்டிச்சோலை கிராம சபை கூட்டம் நடந்தது.

ஊராட்சி ஒன்றிய உதவி அலுவலர் சந்தோஷ் தலைமை வகித்தார்.

சுகாதார துறை ஆய்வாளர் பைசல், தோட்டக் கலை உதவி அலுவலர் கீதா முன்னிலை வகித்தனர்.

பட்டா இல்லாத மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும், மழையால் சேதமடைந்து ஒழுகும் கூரை மற்றும் தகர வீடுகளுக்கு பாதுகாப்பாக தார்பாய் வழங்க வேண்டும். ஊரில் உள்ள குடிநீர் தொட்டிக்கு முறையான ஏணி மற்றும் பராமரிப்பு வசதி இல்லாதது, உபரி நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. விடுபட்ட வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்குவது, பழுதடைந்த பழைய குடிநீர் தொட்டியை சீரமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதையை மீட்க நடவடிக்கை எடுக்கவும், மழைநீரும் சாக்கடை நீரும் வீடுகளுக்குள் செல்வதை தடுக்க 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை கொண்டு கால்வாய்களை தூர்வாரி 'ரிங்' அமைத்துத் தர வேண்டும். சாலை விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்ட பஸ் ஸ்டாப் நிழற்குடையை மீண்டும் கட்ட வேண்டும், கூடுதல் பஸ் வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதிகாரிகள் கூறுகையில், 'அடுத்த மாதம் துவங்கும் கணக்கெடுப்பில் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் சேர்க்கப்படும் ; ஜல் ஜீவன் 2.0 திட்டத்தின் கீழ் விடுபட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்; குடிநீர் தொட்டி பழுதுபார்ப்புக்கு ரூ.1.75 லட்சம் ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் குறித்து தாசில்தாரிடம் மனு அளிக்கலாம்; பஸ் வசதி மற்றும் தனியார் பங்களிப்புடன் தார்பாய் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us