பஜாரில் பேஜார் செய்யும் கரடி கூண்டில் சிக்காமல் 'எஸ்கேப்'
பஜாரில் பேஜார் செய்யும் கரடி கூண்டில் சிக்காமல் 'எஸ்கேப்'
ADDED : நவ 18, 2026 06:09 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் கொலக்கம்பை பஜாரில் வைத்த கூண்டிற்குள் சென்ற கரடி பழங்களை மட்டும் உட்கொண்டு சிக்காமல் சென்றது.
குன்னுார் அருகே கொலக்கம்பை பகுதியில், கடந்த சில மாதங்களாக ஒற்றை கரடி வந்து குடியிருப்பு மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து பொருட்களை சேதம் செய்து வருகிறது. ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
இன்று (நவ.,18) அதிகாலை, 2:30 மணி முதல் 3:30 மணி வரை கொலக்கம்பை பஜார் பகுதியில் முகாமிட்டிருந்த இந்த கரடி, அங்கு வைத்திருந்த கூண்டிற்குள் சென்று பழங்களை உட்கொண்டு சிக்காமல் வெளியே வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சப்தம் எழுப்பியதால், உஷாரான கரடி அங்கிருந்து தப்பி சென்றது. கண்காணிப்பு தொடர்கிறது.
