/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் கண்காட்சி: பார்வையாளர்கள் வியப்பு
/
பள்ளியில் கண்காட்சி: பார்வையாளர்கள் வியப்பு
ADDED : மார் 01, 2024 12:07 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே பாக்கனா ஐ.எம்.எஸ். உயர்நிலை பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
பள்ளி நிர்வாகம், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், 'ஆல் தி சில்ட்ரன்' இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரன் வரவேற்றார். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆசிரிய பயிற்றுனர் பால்துரை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற, கூடலுார் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார், பந்தலுார் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களின் அறிவியல் படைப்புகள் குறித்து, விளக்கங்களை கேட்டறிந்தனர். சிறந்த கண்காட்சி அரங்கு அமைத்த, 12 குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
குடிமக்கள் மன்ற பொறுப்பாளர் சந்திரன், பி.டி.ஏ. தலைவர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். உதவி தலைமைஆசிரியர் ஷாகிரா நன்றி கூறினார்.

