/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரம் விழுந்து இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
/
மரம் விழுந்து இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 03, 2024 06:32 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே, பிதர்காடு பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து, தமிழக-கேரள போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையும், குளிரான காலநிலை நிலவியது.
இந்நிலையில், கூடலுாரில் இருந்து பிதர்காடு வழியாக, கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கைவட்டா என்ற இடத்தில், சாலையோரத்தில் காய்ந்த நிலையில் இருந்த மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால், தமிழக - கேரளா போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பள்ளிகளுக்கு செல்லும் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மின் கம்பம் உடைந்து விழுந்து, மின் தடை ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் இணைந்து, மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, ஒரு மணிநேரத்துக்கு பின்பு, இரு மாநில போக்குவரத்து சீரானது.