/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லேம்ஸ்ராக் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
லேம்ஸ்ராக் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
லேம்ஸ்ராக் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
லேம்ஸ்ராக் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 04, 2025 09:42 PM

குன்னுார்; குன்னுார் லேம்ஸ்ராக்,டால்பின் நோஸ் சாலையில் மரம் விழுந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னுார் லேம்ஸ்ராக் டால்பின் நோஸ் சாலையில், கெபி அருகே நேற்று சாலையில் மரம் விழுந்தது. அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக சுற்றுலா காரின் முன் பகுதியில் கிளைகள் விழுந்து லேசாக சேதமடைந்தது. சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அவ்வழியாக வந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர்.
தொடர்ந்து, குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை முழுமையாக வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.