/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் விழுந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் விழுந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 17, 2025 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் கோடமலை சாலையில், ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னுாரில் கடந்த, 3 நாட்களாக கனமழை பெய்தது. இரவில், 2:00 மணி நேரம் முதல், 3:00 மணி நேரம் வரை பெய்யும் கனமழையால் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது.
நேற்று காலை, 8:00 மணியளவில் குன்னுார் வண்டிச்சோலை அருகே -கோடமலை சாலையில், ஒரே இடத்தில் ராட்சத மரம் உட்பட, 3 மரங்கள் விழுந்தன. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு வீரர்கள் சென்று மரத்தை வெட்டி, அகற்றி காலை, 10:00 மணியளவில் முழுமையாக சீரமைத்தனர். இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.