/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரம் விழுந்து கார் சேதம் போக்குவரத்து பாதிப்பு
/
மரம் விழுந்து கார் சேதம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 23, 2025 10:31 PM

கூடலுார் : பந்தலுார், கூடலுார், முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை,மழை மற்றும் காற்றின் காரணமாக, மைசூரு தேசிய நெடுஞ்சாலை மாக்கமூலா பகுதியில் சாலையோரம் காய்ந்த மூங்கில்கள் சாய்ந்தது. மார்த்தோமா நகர் பகுதியில் சாலையோரம் இருந்த மரம் திடீரென, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டது. காரில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.
தொடர்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய நெடுஞ்சாலை துறையினர் மரம், மூங்கில்களை அகற்றினர். கார் மீட்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதன் காரணமாக, நீலகிரி, கர்நாடக, கேரளா இடையே சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல, நேற்று பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், நகரபகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பல பகுதிகளில் மழை நீர் வடிகால் அடைப்பட்டு இருந்ததால், சாலையில் வெள்ள தேக்கம் ஏற்பட்டது.