/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலுவை தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
நிலுவை தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 07, 2025 08:44 PM
கோத்தகிரி: பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலை நிர்ணயத்தை மாற்றம் இல்லாமல், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். என, விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் தலைவர் மஞ்சைமோகன் தலைமையில், பொது செயலாளர் நடராஜன் மற்றும் துணை செயலாளர் வாசு ஆகியோர், சென்னை தலைமை செயலகத்தில், நிதித்துறை துணை செயலாளர், குன்னூர் இன்கோசர்வ் மேலாண்மை செயலாட்சியர் ராஜ கோபாலை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு: நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயத்தை, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நம்பி உள்ளனர். விலை வீழ்ச்சி காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
நீலகிரி இன்கோசர்வ் நிர்வாகம், தேயிலை வாரியத்தால் நிர்ணயிக்கும் மாதாந்திர பசுந்தேயிலைக்கான விலையை, மாற்றம் இல்லாமல் வழங்க வேண்டும். மேலும், 2024ம் ஆண்டுக்கான விலை வித்தியாச நிலுவைத் தொகையை உனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

