/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறன் பயிற்சி முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு
/
திறன் பயிற்சி முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு
திறன் பயிற்சி முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு
திறன் பயிற்சி முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 07, 2025 08:44 PM
ஊட்டி: - பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி முகாம் சேலத்தில் நடக்கிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை;
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி நடந்து வருகிறது.
சேலம் மல்லூரில் இன்று 8ந் தேதி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை, 9:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் பங்கேற்கும் இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளை பெருக்கும் வகையில், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதார படிப்புகள் மற்றும் டிராக்டர் உற்பத்தி மெக்கானிக் உள்ளிட்ட மதிப்புமிக்க பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
முகாமில் பங்கேற்க, 18 முதல் 33 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் தகுதி உடையவர்கள்.
பங்கேற்க விருப்பம் உள்ள இளைஞர்கள் தங்கள் அதிகபட்ச கல்வி தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன், நேரில் வரவேண்டும்.
விருப்பமுள்ள பழங்குடியின இளைஞர்கள் உடனடியாக, https://forms.gle/1JwnHdFLDhmgv இணையதளத்தை பயன் படுத்தலாம் கூடுதல் தகவலுக்கு, 97905 74437 என்று எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

