/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் கல்லுாரியில் அறக்கட்டளை துவக்கம்
/
குன்னுார் கல்லுாரியில் அறக்கட்டளை துவக்கம்
ADDED : நவ 03, 2024 10:17 PM
குன்னுார்; குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரியில் 'அறக்கொடை' நிதி அறக்கட்டளை துவக்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா அறக்கட்டளை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இதன் கடமைகள் குறித்து பேசினார். நன் கொடையாளரான தொழிலதிபர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறக்கட்டளை அவசியம் குறித்து பேசினார்.
அறங்காவலராக தேர்வு செய்யப்பட்ட கல்லுாரியில் புத்தமைப்பு குழு இயக்குனர் பேராசிரியர் தொள்ளன் கிருஷ்ணமூர்த்தி, 'சர்வதேச பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளின் அறக்கொடை நிதி செயல்பாடு, வளர்ச்சி குறித்தும், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகங்களில் ஆராய்ச்சி செயல்பாடுகள், அதன் கண்டுபிடிப்பு, நோபல் பரிசுகள்,' குறித்தும் பேசினார்.
கல்லுாரி வளர்ச்சிக்கு உதவிய தொழிலதிபர்கள் ராதிகா சாஸ்திரி, வைஷால் கிவ் ராஜ், பிலிப் மேத்யூ, அமிர்தராஜ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியை பேராசிரியை லீமா டிரோஸ்லின் தொகுத்து வழங்கினார். பேராசிரியை ஹேமா ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.