ADDED : மார் 18, 2025 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:
அருவங்காடு படுகர் நல சங்கம் மற்றும் நங்க படுகர் பேரவை, இளைஞர் பேரவை, நீலகிரி சேவா கேந்திரா, கோவை பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் மற்றும் மேக் ஆஸ்பிட்டல் ஆகியவை இணைந்து அருவங்காடு ஐயப்பன் கோவில் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தின. வெலிங்டன் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி துவக்கி வைத்தார்.
எலும்பு மூட்டு மற்றும் பல் மருத்துவ பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது.
பி.ஆர்.ஜே., எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அருவங்காடு எஸ்.ஐ., ஜெயராம், அருவங்காடு படுகர் சங்க நிர்வாகிகள் ரஞ்சித், சண்முகம், ரஞ்சித் குமார், முரளி, ரமேஷ், கரியபெட்டன், சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.