ADDED : மார் 21, 2025 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் பீசலு அறக்கட்டளை சார்பில், தாம்பட்டி கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
சங்க தலைவர் மோரீஸ் சாந்தா குரூஸ், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உறுப்பினர் தேவராஜ் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிர்வாகி ஷாலினி முரளிதரன் தலைமை வகித்தார்.
அதில், கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பயன்பெறும் வகையில், பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நுாற்றுகணக்கானோர் பங்கேற்றனர். இதே போல, குன்னுார் கிருஷ்ணாபுரத்தில் நடத்திய இலவச மருத்துவ முகாமில், 75 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு பல்வேறு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.