UPDATED : ஆக 09, 2026 05:12 PM
ADDED : ஆக 09, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கூடலூர்: கூடலூர் பாடந்துறையில் நடந்த இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கூடலூர் பாடந்துறை பகுதியில், முதுமலை ரோட்டரி கிளப், கோழிக்கோடு இக்ரா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு ரோட்டரி கிளப் தலைவர் ராபர்ட் அலெக்சாண்டர் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.
இதில், நோயாளிகளுக்கு டாக்டர்கள் உடல் பரிசோதனை செய்ததுடன், ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 112 பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் துணைத் தலைவர் ஆனந்தி, பொருளாளர் ஸ்ரீனு, திட்டத் தலைவர் யாசின் ஷெரிப் ஆகியோர் செய்திருந்தனர்.
