/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவியல் இயக்க மாநில கருத்தாளருக்கு காந்தி விருது
/
அறிவியல் இயக்க மாநில கருத்தாளருக்கு காந்தி விருது
ADDED : அக் 05, 2025 10:56 PM

ஊட்டி: ஊட்டி அருகே, மஞ்சூர் காந்தி சேவா சங்கம் சார்பில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளரான ராஜூவுக்கு, உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், தொழிலதிபர்கள் போஜராஜன் மற்றும் சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
காந்தி சேவா சங்க செயலாளர் போஜன் வரவேற்று பேசுகையில்,''மதுவிலக்கு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்பாக பணிபுரிந்தமைக்காக, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது' என்றார். விருது பெற்ற ராஜூ தனது ஏற்புரையில் பேசுகையில்,''காந்தி ஜெயந்தி விழாவில், காந்திய கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவது சிறந்த பணியாகும். மதுவிலக்கு, எளிமையான வாழ்க்கை, கிராம பொருளாதார மேம்பாடு ஆகிய காந்திய கொள்கைகள் இன்று காலவதியாகி போய் உள்ளதாக பலர் கருதுகின்றனர்.
பூமியால் தாக்கு பிடிக்க முடியாத இந்த வளர்ச்சி, ஒருநாள் தலை தட்டி நிற்கும். அப்போதுதான், மக்கள் காந்தியின் மகிமையை புரிந்து கொள்வார்கள். வருங்கால சமுதாயத்திற்கு காந்தியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அனைவரது கடமை,'' என்றார்.
நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மணிவண்ணன், சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.