UPDATED : நவ 06, 2026 07:41 PM
ADDED : நவ 06, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:
கூடலுார் ஓவேலி பகுதியில், பழங்குடியின மக்களுக்கு மளிகை பொருட்கள், போர்வைகள் பரிசாக வழங்கப்பட்டது.
கூடலுார் சேவாலயா அறக்கட்டளை சார்பில், ஓவேலி எல்லமலை, பழங்குடி கிராமத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சேவாலயா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பழங்குடியினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, பழங்குடியினர் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில், 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், போர்வைகளை தேவநாத் மற்றும் லட்சுமி தேவநாத் ஆகியோர் தீபாவளி பரிசாக வழங்கினார். முகாமில், நியூஹோப் எஸ்.எஸ்.ஜ., கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
