/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கனரக ஓட்டுனர்கள் எஸ்.பி.,யிடம் புகார்
/
கனரக ஓட்டுனர்கள் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : ஜன 18, 2024 01:57 AM

ஊட்டி : தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் நீலகிரி மாவட்ட பொருளாளர் பிரசாந்த் தலைமையில் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள மனு:
தமிழகத்திலும் மற்றும் 17 மாநிலங்களில், 106 சட்டத்தை எதிர்த்தும், ஓட்டுனர் கையொப்பம் இல்லாத ஆன்லைன் வழக்கை எதிர்த்து, நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஓட்டுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அறிவிப்பை அறிந்தும், ஊட்டியில் உள்ள சில கனரக வாகன உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்பட்டு, எங்கள் நியாயமான கோரிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில், தங்கள் ஓட்டுனர்களுக்கு கொடுத்துள்ள முன் பணத்தை பெற கட்டாயப்படுத்தி வாகனங்களை வெளிமாநிலத்திற்கு இயக்கி வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த சமயத்தில் ஓட்டுனர் களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.
வேலை நிறுத்த போராட்ட சமயத்தில் டிரைவர்களை மிரட்டி வெளியிடங்களுக்கு அனுப்புவதை தாங்கள் தடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.