/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 06:07 AM

ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகில், தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலகம் சங்கம் இணைந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிபீதா தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் பைசல் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில அரசின், வேளாண்மை துறையில் செயல்படுத்தும் - உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், --உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் பலர் பங்கேற் றனர்.

