UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 06:34 PM

பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதியில் வெளியூர் ஜவுளி வியாபாரிகள், அதிக அளவில் குவிந்ததால் மக்களும் ஆர்வத்துடன் விலை குறைவாக ஜவுளிகளை வாங்கி சென்றனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது கொளப்பள்ளி பஜார் பகுதியில் நுாற்றுக்கணக்கான, சாலையோர ஜவுளி வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவர். நடப்பாண்டு பஜாரில், 200க்கும் மேற்பட்ட வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஜவுளி, பெண்களுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், கடைகள் அமைத்தனர்.
குறைவான விலைக்கு பொருட்கள் கிடைப்பதால், தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வந்து ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். கூடலூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், பொருட்கள் வாங்க குவிந்ததால் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டமாக உள்ளது. இதனால், போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
