sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மசினகுடி யானை வழித்தடத்தில் விதிமீறிய கட்டடம்...  இடித்து அகற்றம்!'சீல்' வைக்கப்பட்ட விடுதிகள் மீதும் விரைவில் நடவடிக்கை

/

மசினகுடி யானை வழித்தடத்தில் விதிமீறிய கட்டடம்...  இடித்து அகற்றம்!'சீல்' வைக்கப்பட்ட விடுதிகள் மீதும் விரைவில் நடவடிக்கை

மசினகுடி யானை வழித்தடத்தில் விதிமீறிய கட்டடம்...  இடித்து அகற்றம்!'சீல்' வைக்கப்பட்ட விடுதிகள் மீதும் விரைவில் நடவடிக்கை

மசினகுடி யானை வழித்தடத்தில் விதிமீறிய கட்டடம்...  இடித்து அகற்றம்!'சீல்' வைக்கப்பட்ட விடுதிகள் மீதும் விரைவில் நடவடிக்கை


ADDED : நவ 18, 2025 05:15 AM

Google News

ADDED : நவ 18, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;மசினகுடி, வாழை தோட்டம் பகுதியில், யானை வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு கட்டடத்தை அரசு அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

முதுமலை, மசினகுடி சீகூர் யானை வழித்தடத்தில் விதிமீறி கட்டப்பட்ட சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்களை அகற்ற, 2008ல் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படி, யானை வழித்தடம் தொடர்பாக, 2010 வரைபடத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டது.

அப்போது, அப்பகுதியில் உள்ள, தனியார் விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து, 2018ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 39 கட்டடங்களில் உள்ள, 309 அறைகளுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் 'சீல்' வைக்கப்பட்டது.

ஆய்வு செய்ய கமிட்டி இதை தொடர்ந்து, கட்டட உரிமையாளர்கள் உள்ளூர் மக்கள் கோரிக்கை ஏற்று, 2020ல் வழங்கப்பட்ட கோர்ட் உத்தரவுபடி, 'யானைகள் வழித்தடம் தொடர்பான பிரச்னைக ளை ஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான ஆய்வு குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக்கு பின் அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து, சீகூர் யானை வழித்தடத்தில், 'சீல்'வைக்கப்பட்ட கட்டடத்தை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. 'கோர்ட் உத்தரவுப்படி, யானை வழிதடத்திலுள்ள, 39 தங்கும் விடுதிகளில் உள்ள கட்டடங்கள் விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். யானை வழித்தடம் குறித்து டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விதிமீறிய கட்டடம் இடிப்பு இதனிடையே, 'வாழை தோட்டம் பகுதியில் யானை வழித்தடத்தில், திவாகர் ரத்தினம் என்பவர், யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனி கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும்,' என, அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் சிலர் சென்னை ஐகோர்ட்டில் தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரணை செய்த, ஐகோர்ட் நீதிபதிகள், யானை வழிதடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, இதற்கான பணிகளை மேற்கொள்ள, நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார். அதன்படி, கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி தலைமையில், வனச்சரகர் தனபால், வி.ஏ.ஓ., ஈஸ்வரன், ஊராட்சி செயலாளர் கிரன் முன்னிலையில், போலீசார் பாதுகாப்புடன், வாழை தோட்டத்தில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

விதிமீறினால் நடவடிக்கை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, இப்பகுதியில் கட்டப்பட்ட கட்டடம் பொக்லைன் உதவியுடன் இடிக்கப்பட்டது. இது, தொடர்பான அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்படும். மேலும், யானை வழித்தடம் சீல் வைக்கப்பட்ட,39 கட்டடங்கள் இடிப்பது தொடர்பான நடவடிக்கையை தனியாக மேற்கொண்டு வருகிறோம். விரைவில் அப்பணிகள் துவங்கும். மேலும், இப்பகுதியில் புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி இல்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us