/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சரிவர மூடப்படாத குழி; 'பார்க்கிங்' செய்வதில் இடையூறு
/
சரிவர மூடப்படாத குழி; 'பார்க்கிங்' செய்வதில் இடையூறு
சரிவர மூடப்படாத குழி; 'பார்க்கிங்' செய்வதில் இடையூறு
சரிவர மூடப்படாத குழி; 'பார்க்கிங்' செய்வதில் இடையூறு
ADDED : டிச 06, 2024 10:48 PM

கோத்தகிரி; கோத்தகிரி நகர சாலைகளில், தண்ணீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட கால்வாய், சமன் செய்யாமல் உள்ளதால், 'பார்க்கிங்' செய்வதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி நகருக்கு தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய, மத்திய அரசு, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக, சாலையோரத்தில், கால்வாய் வெட்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
மார்க்கெட் சாலை மற்றும் தாலுகா அலுவலக சாலைகளில், கால்வாய் சரிவர மூடப்படாமல் உள்ளது. ஏற்கனவே, குறுகலான இச்சாலையில், வாகனங்களை ஒருங்கே நிறுத்த முடியாமல் உள்ளது.
மேலும், எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'போக்குவரத்து நிறைந்த இச்சாலைகளில், வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருவதால் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, குழிகளை சமன் செய்து தார் அல்லது கான்கிரீட் போட நடவடிக்கை எடுப்பது அவசியம்,' என்றனர்.