/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு: டாக்டர் அறிவுரை
/
பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு: டாக்டர் அறிவுரை
ADDED : ஜன 09, 2025 10:41 PM

கூடலுார், ; 'பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டும்' என, டாக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
கூடலுார் நகர சுகாதார நிலையத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பின் சார்பில், பச்சிளம் குழந்தைகள் இறப்பு தடுப்பு குறித்து விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது.
பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
நகர சுகாதார நிலைய டாக்டர் அன்பு பேசுகையில், ''பச்சிளம் குழந்தைகள் இறப்பை எளிதாக தடுக்க முடியும். அதற்கு குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். குழந்தைகளின் எடை குறைவது, அடிக்கடி காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம். ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் உரிய உணவுகள் எடுத்து கொள்வது அவசியம்.
குழந்தைகளுக்கு, டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்துகள் வழங்க கூடாது,'' என்றார்.
நிகழ்ச்சியில், முதுநிலை செவிலியர் செல்வி, செவிலியர் வெண்ணிலா, 'ஆல் தி சில்ட்ரன்' ஒருங்கிணைப்பாளர் அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

