/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெ., நினைவு தினம்: அ.தி.மு.க., அனுசரிப்பு
/
ஜெ., நினைவு தினம்: அ.தி.மு.க., அனுசரிப்பு
ADDED : டிச 06, 2025 05:27 AM

ஊட்டி: ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்,9வது நினைவு தினம், அ.தி.மு.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், ஜெயலலிதா படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தியதுடன், மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.
மேலும், 'கட்சியினர் எதிர்மறை எண்ணங்களை மறந்து, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், பழனிச்சாமியை முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடு பட வேண்டும்,' என, உறுதிமொழி ஏற்கப்பட்டது
மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பாசறை செயலாளர் அக்கிம் பாபு, ஒன்றிய செயலாளர் குமார் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சித்ரா உட்பட, பலர் பங்கேற்றனர். ஊட்டி நகர செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

