/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை ஓரங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
/
சாலை ஓரங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
ADDED : பிப் 20, 2024 06:03 AM

பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டது.
அப்போது தோட்டங்களை ஒட்டிய சாலை ஓரங்களில், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மரங்கள் மற்றும் அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன.
அதில், பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில், ஊதா நிறத்தில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா பூக்கள் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
தற்போது, பந்தலுார் அருகே, கூடலுார்- பாட்டவயல் மற்றும் வயநாடு பகுதிக்கு செல்லும் சாலை, ஓரத்தில் ஊதா நிறத்தில் பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. இந்த வழியாக செல்லும் பயணிகள் இந்த பூக்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

