/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காிம்புலி அம்மன் கோவில் மஹோற்சவம்
/
காிம்புலி அம்மன் கோவில் மஹோற்சவம்
ADDED : பிப் 09, 2024 11:16 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில், சேரங்கோடு ஸ்ரீ கரிம்புலி அம்மன், துர்காதேவி, கரிவில்லி அதிராளன்மார் கோவில் அமைந்துள்ளது.
கோவிலில் கும்பாபிஷேக தின மஹோற்சவம் மற்றும் ஆண்டு திருவிழா கடந்த எட்டாம் தேதி காலை, 7:00 மணிக்கு நடைதிறப்பு மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் மற்றும் அன்னதானம் தீபாராதனை, ஆதிவாசிகளின் கலை நிகழ்ச்சிகள், வழிபாடு பெறுதல், இரவு பூஜை நடந்தது.
9-ம் தேதி கற்பூர ஆராதனை, தெய்வங்களின் ஊர்வலம், தொடர்ந்து பல்வேறு பூஜைகள், கரிம்புலி அம்மன் நீராடுதல், அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் எழுந்தருளல், காணிக்கை பிரிதல் குருதி ஆட்டம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நிகழ்ச்சியில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெற்றனர். நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சி இடம் பெற்றது.
திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்று சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் குட்டன், செயலாளர் சுனில் குமார், பொருளாளர் துரைசாமி உட்பட பலர் செய்திருந்தனர்.