UPDATED : நவ 09, 2026 02:18 PM
ADDED : நவ 09, 2026 02:14 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே, பிதர்காடு பகுதியில் தீபாவளியை முன்னிட்டு, ஏழை முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் கருணை உள்ளங்கள் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அமைப்பு சார்பில் தீபாவளியை முன்னிட்டு, ஏழை முதியோர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சமூக ஆர்வலர் சபாது வரவேற்றார்.
தலைவர் தயானந்தன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ், பொருளாளர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர் ஜமீது ஆகியோர் முன்னிலை வகித்து, 50 பேருக்கு பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். ‘தீபாவளி நாளில் தங்களுக்கு இது போன்ற பொருட்கள் வழங்கியது மகிழ்ச்சி ஏற்படுத்தியது,’ என, முதியோர் தெரிவித்தனர். நிர்வாகி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
