தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கோடநாடு கொலை வழக்கு டிச.,18ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

கோடநாடு கொலை வழக்கு டிச.,18ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

கோடநாடு கொலை வழக்கு டிச.,18ம் தேதிக்கு ஒத்தி வைப்பு


ADDED : நவ 20, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு, டிச., 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய் ஆஜரானார். வழக்கை விசாரித்து வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆஜராயினர். தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரனிடம், ‘குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கு தொடர்பான தடயவியல் குறித்த அறிக்கைகள் இன்னும் கிடைக்க பெறாமல் நிலுவையில் உள்ளது,’ என, போலீஸ் தரப்பு தெரிவித்தது.

இதனை கேட்ட நீதிபதி, 'அடுத்த வழக்கு விசாரணையின் போது, தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள விபரங்கள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெளிவாக விளக்க வேண்டும்,’ என கூறி, டிச., 18ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us