ADDED : நவ 20, 2026 06:18 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், செர்புளச்சேரி காரல்மண்ணா பகுதியை சேர்ந்தவர் பிரேம்ராஜ், 44. இவரது நண்பன் அனீஷ். நேற்று (நவ.,19) இரவு, 11:00 மணியளவில், உயர்நிலைப்பள்ளி சாலையில் உள்ள மைதானம் அருகே, பிரேம்ராஜ், அனீஷ் இருவரும் ஸ்கூட்டர் சென்றனர். அப்போது, எதிரே வந்த ஆம்னி வேன் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த பிரேம்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த அனீஷ் பெரிந்தல்மண்ணாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செர்புளச்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
