/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார்- குந்தா நெடுஞ்சாலை கோடேரியில் அதிரிக்கும் விபத்து
/
குன்னுார்- குந்தா நெடுஞ்சாலை கோடேரியில் அதிரிக்கும் விபத்து
குன்னுார்- குந்தா நெடுஞ்சாலை கோடேரியில் அதிரிக்கும் விபத்து
குன்னுார்- குந்தா நெடுஞ்சாலை கோடேரியில் அதிரிக்கும் விபத்து
ADDED : பிப் 14, 2024 09:45 PM
குன்னுார்: குன்னுார்- குந்தா நெடுஞ்சாலையில் உள்ள கோடேரியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
குன்னுாரில் இருந்து, மஞ்சூர், குந்தா, அதிகரட்டி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வழித்தடமாக குன்னுார் -குந்தா நெடுஞ்சாலை உள்ளது.
அதில், கோடேரி அருகே கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை பகுதிகளில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. வாகனங்கள் அதிகமாக செல்லும் நிலையில அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த, 2 நாட்களுக்கு முன்பு ரேஷன் கடை அருகே கார் மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்தார். மேலும், கார்-வேன் மோதிய விபத்தில் காரில் வந்த பெண் மற்றும் வேனில் வந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
கவுன்சிலர் மனோகரன் கூறுகையில்,''இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய பல முறை நெடுஞ்சாலை துறைக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு சாலை விரிவாக்கம் செய்வதுடன் ஆபத்தான வளைவுகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்,'' என்றார்.