UPDATED : நவ 16, 2026 06:57 PM
ADDED : நவ 16, 2026 06:55 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: நிலச்சரிவு பாதித்த பர்லியார் பகுதியில் ஊட்டி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
குன்னுார் பர்லியார் சாலையில் கடந்த மாதம், 23ம் தேதி பெய்த கன மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜன், குன்னூரில் இருந்து பர்லியார் வரை ஏற்பட்ட மண் சரிவு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடக்கும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். ஆய்வின் போது ,பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
