/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரயில் பாதையில் மண்சரிவு; அகற்றிய ஊழியர்கள்
/
ரயில் பாதையில் மண்சரிவு; அகற்றிய ஊழியர்கள்
ADDED : அக் 22, 2025 10:35 PM
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கன மழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால், கடந்த 18ம் தேதியில் இருந்து மேட்டுப்பாளையம் -- ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் மேற்கொண்ட போதும், தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டது.
காட்டேரி, ரன்னிமேடு, ஹில் குரோவ் பகுதிகளில் நேற்று ரயில்வே பொது பணித்துறை ஊழியர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அகற்றினர். ஊட்டி-குன்னூர் இடையே மலை ரயில் பாதிப்பின்றி இயக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் பாறைகள், மண் சரிவுகள் அகற்றும் பணிகள் நடந்தன.
மழை தாக்கம் அதிகரிப்பதால் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. மழை பாதிப்பு இருப்பதால் நாளை (இன்று) ஒரு நாள் மலை ரயில் ரத்து செய்யப்படும்,''என்றனர்.