/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை
/
தனியார் தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை
ADDED : நவ 21, 2024 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ராக்வுட் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர், யானை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்ததை பார்த்துள்ளனர். தகவல் அறிந்த வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதியில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பிரேத பரிசோதனை செய்த பின்னரே, சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். உயிரிழந்தது ஆண் சிறுத்தை,' என்றனர்.