/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு பன்றியை கொன்று மரத்தில் தொங்கவிட்ட சிறுத்தை
/
காட்டு பன்றியை கொன்று மரத்தில் தொங்கவிட்ட சிறுத்தை
காட்டு பன்றியை கொன்று மரத்தில் தொங்கவிட்ட சிறுத்தை
காட்டு பன்றியை கொன்று மரத்தில் தொங்கவிட்ட சிறுத்தை
ADDED : டிச 31, 2024 06:53 AM

குன்னுார் : குன்னுார் கிடங்கு முத்தம்மாச்சேரி பகுதிக்கு வந்த சிறுத்தை காட்டு பன்றியை வேட்டையாடி மரத்தில் தொங்கவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னுார் பகுதியில் இரவு நேரத்தில் வரும் சிறுத்தைகள், வளர்ப்பு நாய்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வேட்டையாடி செல்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் அருவங்காடு பாலாஜிநகர், பாய்ஸ் கம்பெனி, கார்டைட் தொழிற்சாலை கேட்டில் பவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நாய்களை வேட்டையாடி சென்றுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி நகர் -ஆரோக்கியபுரம் இடையே உள்ள முத்தம்மாசேரி பகுதியில் மரத்தின் மீது காட்டு பன்றி இறந்த நிலையில் தொங்கியதை மக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இப்பகுதியை சேர்ந்த பிரதீஷ் கூறுகையில்,''இங்கு அடிக்கடி சிறுத்தை வந்து நாய்களை வேட்டையாடி செல்கிறது. இங்குள்ள வீட்டின் அருகே உள்ள மரத்தில் காட்டு பன்றியை அடித்து கொன்று, மரத்தில் தொங்கவிட்டு சென்றுள்ளது. மீண்டும் வரும் என்பதால் வனத்துறை கண்காணிக்க தகவல் கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இந்நிலையில், நேற்று காட்டு பன்றி குட்டியை காகங்கள் கொத்தி வந்தன. கட்டபெட்டு வனச்சரகர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் பன்றி உடலை மீட்டு அதே இடத்தில் புதைத்தனர்.