/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பகலில் உலா வரும் சிறுத்தை: கண்காணிக்க கேமரா பொருத்தம்
/
பகலில் உலா வரும் சிறுத்தை: கண்காணிக்க கேமரா பொருத்தம்
பகலில் உலா வரும் சிறுத்தை: கண்காணிக்க கேமரா பொருத்தம்
பகலில் உலா வரும் சிறுத்தை: கண்காணிக்க கேமரா பொருத்தம்
ADDED : அக் 22, 2024 11:51 PM

குன்னுார் : குன்னுார் வெலிங்டன் பகுதியில் பகல் நேரத்தில் உலா வரும் சிறுத்தையை கண்காணிக்க வனத்துறை சார்பில், தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது.
குன்னுார் வெலிங்டன் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வந்த சிறுத்தை பகல் நேரத்தில் உலா வருகிறது.
வெலிங்டன் ரயில் நிலையம் அருகே புதர்கள் சூழந்த இடத்தில், பகல் நேரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று அருகிலுள்ள ராணுவ பகுதியான லேக் சாலையோரத்தில் சிறுத்தையை பார்த்த ஆடு மேய்க்கும் நபர் கன்டோன்மென்ட் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினீத் பாபாசாகிப் லோட்டே குடியிருப்பு வளாக பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் அவ்வழியாக சிறுத்தை சென்றது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, நீலகிரி மாவட்ட பண அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் தானியங்கி கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.
வனத்துறையினர் கூறுகையில், 'எம்.ஆர்.சி., ஏரி பூங்கா சாலையில் இருந்து 'சப்ளை டிப்போ' வரையிலான பகுதிகளில் தனியாக யாரும் செல்ல வேண்டாம்.
நடைபயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.