/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேரீஸ்ஹில் பகுதியில் உலா வரும் சிறுத்தையால் பீதி
/
மேரீஸ்ஹில் பகுதியில் உலா வரும் சிறுத்தையால் பீதி
மேரீஸ்ஹில் பகுதியில் உலா வரும் சிறுத்தையால் பீதி
மேரீஸ்ஹில் பகுதியில் உலா வரும் சிறுத்தையால் பீதி
ADDED : டிச 13, 2025 07:56 AM
ஊட்டி: ஊட்டி அருகே, மேரீஸ்ஹில் பகுதி அருகே வனப்பகுதி இருப்பதால், இரவு நேரங்களில் வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து நாய் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். நேற்று காலையில், பொதுமக்கள் சிலர் வெளியே சென்று பார்த்தபோது, ஒரு குதிரை தாக்கப்பட்டு இறந்து கிடந்தது.
சிறுத்தை தாக்கி குதிரை இறந்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் சிறுத்தைகள் புகுந்து வந்த நிலையில் தற்போது பகல் நேரத்தில் வந்து விடுகின்றன. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள் அச்சப்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே, இந்த பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனத்தில் விட, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

