/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நம்பிக்கை இல்லாத தீர்மானத்துக்கு கடிதம்
/
நம்பிக்கை இல்லாத தீர்மானத்துக்கு கடிதம்
ADDED : ஜன 30, 2025 09:43 PM
குன்னுார்; குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சி மாதாந்திர கூட்டம், தலைவர் பங்கஜம் தலைமையில், செயல் அலுவலர் (பொ) செந்தில்குமார் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில், வார்டு பிரச்னைகள் மற்றும், 15வது திட்ட நிதி ஒதுக்கப்பட்ட வார்டுகள் விபரம் குறித்தும் உறுப்பினர்கள் திலிப், சஜீவன் உட்பட கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
அதில், தலைவருக்கு வேண்டப்பட்டவர்களின் வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கியது தெரிய வந்ததால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
தலைவர் பங்கஜம், துணை தலைவர் ஜெய்சங்கர் மீது, நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து, 8 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட கடிதம், செயல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.
திலிப் கூறுகையில்,''தலைவர் மற்றும் துணை தலைவருக்கு வேண்டப்பட்டவர்களின் வார்டுகளுக்கு, மட்டுமே நிதி ஒதுக்குவோம்; மாநில முதல்வர், கலெக்டரிடம் புகார் அளித்தாலும், ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்ததால், இவர்கள் மீது, நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

