தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காபி உற்பத்தி குறைவு:விலை அதிகரிக்க வாய்ப்பு

காபி உற்பத்தி குறைவு:விலை அதிகரிக்க வாய்ப்பு

காபி உற்பத்தி குறைவு:விலை அதிகரிக்க வாய்ப்பு


UPDATED : நவ 16, 2026 07:27 PM

ADDED : நவ 16, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 07:27 PM ADDED : நவ 16, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்:

கூடலுாரில் காபி உற்பத்தி குறைவாக உள்ளதால், அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக விவசாயிகள் காபி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, 10 ஆயிரத்து 700 ஏக்கரில் ‘ரொபஸ்டா’ காபி; 5,750 ஏக்கரில் ‘அரபிக்கா’ காபி பயிரிட்டுள்ளனர். பொதுவாக, காபி செடியில் மார்ச், ஏப்., மாதம் பூப்பூக்கும். நவ., துவங்கி முதல் மார்ச் வரை காபி பறிக்கும் பணி நடக்கும்.

இந்நிலையில், நடப்பாண்டு, கோடை, பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், காபி விளைச்சல் குறைவாக உள்ளது. முதல் கட்டமாக அரபிக்கா காபி பழங்களை பறிக்கும் பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். தொடர்ந்து, ஜன., முதல் ரோபோஸ்டா காபி பறிக்கும் பணி நடக்கும்.

கடந்த ஆண்டு காபி பழம் கிலோ, 70 ரூபாய், காய்ந்த காபி கிலோ, 220 ரூபாய், சுத்தம் செய்யப்பட்ட அரபிக்கா காபி பருப்பு, 400 ரூபாய் வரையும் கொள்முதல் விலை கிடைத்து. தற்போது, குறைந்த உற்பத்தி உள்ளதால், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கூடலுார் காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் கூறுகையில், ‘‘காபி செடியில் மார்ச், ஏப்., மாதத்தில் பூப்பூக்கும். அப்போது கோடை மழை பெய்வதன் மூலம், மகசூல் கிடைக்கும். நடப்பு ஆண்டு, காபி பூ பூத்த மாதத்தில் கோடை மழை ஏமாற்றியதால், மகசூல் குறைந்துள்ளது. இதனால், காபிக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us