/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டினுள் நுழைந்து மிரட்டியவர் கைது
/
வீட்டினுள் நுழைந்து மிரட்டியவர் கைது
ADDED : நவ 25, 2024 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார் செம்பாலா திருவள்ளுவர் நகர் சேர்ந்தவர் அன்னலட்சுமி,70.
கடந்த, 18ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, அவர் வீட்டில் தனியாக இருந்த போது, இளைஞர் ஒருவர் அவரின் வீட்டினுள் நுழைந்து அவ ரை மிரட்டி உள்ளார்.
அவர் அடையாளம் கண்டு கொண்டதால், இளைஞர் ஓடிவிட்டார். இந்நிலையில், 23ம் தேதி, இரவு, 11:30 மணிக்கு அதே இளைஞர் மீண்டும் அவர் வீட்டுக்குள் நுழைந்து, மூதாட்டியை மிரட்டியதுடன், அவர் வைத்திருந்த, 2000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து, தப்பி சென் றார்.
கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்,34, என்பவரை கைது செய்தனர்.

