/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேலாண்மை தொழில்நுட்ப முகமை திட்டம் சிறு விவசாயிகளுக்கு பயிற்சி
/
மேலாண்மை தொழில்நுட்ப முகமை திட்டம் சிறு விவசாயிகளுக்கு பயிற்சி
மேலாண்மை தொழில்நுட்ப முகமை திட்டம் சிறு விவசாயிகளுக்கு பயிற்சி
மேலாண்மை தொழில்நுட்ப முகமை திட்டம் சிறு விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : டிச 01, 2025 04:50 AM

கூடலூர்: கூடலுாரில் நடந்த விவசாயிகள் பயிற்சி முகாமில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கூடலூர் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில், கூடலூர் தோட்டக்கலை துறை மேலாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
முகமை மேலாளர் ரூபீனா வரவேற்றார். முகாமுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்து, 'தோட்டக்கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள்' குறித்து விளக்கினார்.
'பயிர்களை தாக்கும் நோய்கள், அதற்கான தொழில் நுட்ப தீர்வுகள்' குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கவிதா விளக்கினார். 'விவசாய பொறியியல் துறை சார்ந்த திட்டங்கள்' குறித்து உதவி செயற் பொறியாளர் பூபாலனும், 'விவசாய விளை பொருட்கள் விற்பனை' குறித்து வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை வேளாண் அலுவலர் கலைவாணி ஆகியோர் விளக்கினர். 'பாக்கு விற்பனை தொழில்நுட்பங்கள்' குறித்து நீலகிரி விற்பனைக்குழு கண்காணிப்பாளர் ரமேஷ், 'வேளாண்மையின் முக்கியத்துவம்' குறித்து நீலகிரி ஆர்கானிக் தோட்டக்கலை விவசாயி நிம்மி ஆகியோர் விளக்கினர்.
தொடர்ந்து, விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடந்தது. முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர். முகமை திட்ட உதவி மேலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.

