/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மராத்தான் போட்டி; 988 பேர் பங்கேற்பு
/
மராத்தான் போட்டி; 988 பேர் பங்கேற்பு
ADDED : அக் 05, 2025 11:05 PM
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
அதில், 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 21 கி.மீ., துாரம் என 3 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண்கள், பெண்கள் என 988 பேர் பங்கேற்றனர். 21 கி.மீ. பிரிவில், 304 பேர்; 10 கி.மீ., பிரிவில் 290 பேர்; 5 கி.மீ., பிரிவில் 394 பேர் பங்கேற்றனர். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கம் மற்றும் டி-ஷர்ட் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, உடற்பயிற்சி நடனமான ஜூம்பா நடனம் இடம் பெற்றது. தோழமை, விளையாட்டு ஊக்குவிப்பு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த இந்த போட்டி நடத்தப்பட்டதாக, ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.