ADDED : நவ 08, 2026 05:16 PM
கூடலூர்: கூடலூரில் தீபாவளிக்கு கோழி உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் விற்பனை 'டல்' அடித்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கூடலூரில் இறைச்சி வியாபாரிகள் தீபாவளி பண்டிகை விற்பனை எதிர்பார்த்து, கடைகளில் கோழி, ஆடுகளை அதிகளவில் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தனர். நேற்று, அமாவாசை என்பதால், தீபாவளி பண்டிகையை பெரும்பாலான குடும்பங்கள் அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவு சமைத்து தங்கள் முன்னோர்களுக்கு படைத்தனர்.
இறைச்சி கடைகளில், எதிர்பார்த்து வியாபாரம் இன்றி 'டல்' அடித்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கோழி இறைச்சி வியாபாரி சாதிக் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை நாளில் கறி கோழி விற்பனை அதிகம் இருக்கும் என்பதால், கோழிகளை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளோம். இன்று (நேற்று) அமாவாசை என்பதால், பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்த்து விட்டதால் எதிர்பார்த்த விற்பனை இல்லை. இதனால், நாளை (இன்று) கோழி இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும்.’’ என்றார்'
