/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 14, 2024 08:58 PM
பந்தலுார்; பந்தலுாரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ ஆலோசனை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'ஆல் தி சில்ட்ரன்' மற்றும் கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டாக்டர் ரெக்சந்தாராஜ் தலைமை வகித்து, சுகாதார நிலையங்களில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் குறித்து விளக்கி பேசினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர், சிவசுப்ரமணியம் பேசுகையில்,''கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
ஊட்டச்சத்து நிறைந்த தானிய உணவுகள், பழங்கள், கீரை மற்றும் முட்டை, மீன் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அயோடின் சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.
'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசுகையில், ''கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி மற்றும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகள், நேரம் தவறாமல் உணவு எடுத்து கொள்வது அவசியம்,'' என்றார்.