UPDATED : நவ 25, 2026 08:14 PM
ADDED : நவ 25, 2026 08:08 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் நுாலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, பந்தலுார் நுாலகத்தில், இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நுாலகர் அறிவழகன் வரவேற்றார். நுாலகர் நித்திய கல்யாணி தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் முத்துக்குமார் முகாமை துவக்கி வைத்தார். அதில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டதுடன், பொது மருத்துவ முகாமும் நடந்தது. பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. டாக்டர் ஜெயின் மார்ட்டினாஸ், லேப் டெக்னீசியன் கிரிஜா, மருந்தாக நவீன், உதவியாளர் லோய்ஷோன் உள்ளிட்டோர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். வாசகர்கள், டாக்சி ஜீப் ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.
