தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மெத்தம்பெட்டமைன் கடத்தியவர் கைது

மெத்தம்பெட்டமைன் கடத்தியவர் கைது

மெத்தம்பெட்டமைன் கடத்தியவர் கைது


ADDED : அக் 25, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 06:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு அருகே, 56.5 கிராம் மதிப்பிலான போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் பிடிபட்டது. இச்சம்பவம் தொடர்பாக மலப்புரத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் முழுவதும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கலால் துறை அதிகாரிகள் தீவிர வாகனத்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி சந்தைப்புரை பகுதியில், ஆலத்தூர் கலால் வட்ட இன்ஸ்பெக்டர் சமீர் தலைமையிலான சிறப்புப் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பொலிரோ ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த வாகனத்திலும், அதை ஓட்டிவந்த நபரின் உடலிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 2.26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 56.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதைக்கண்டுபிடித்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர் மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி, முன்னியூர், வெள்ளிமூக்கு படிக்கல் பகுதியைச் சேர்ந்த அனஸ், 35, என்பதும், இவர் விற்பனைக்காக இப்பொருளைக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

கைது செய்த அனசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us