UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 04:46 PM

குன்னுார்: நீலகிரி மலை ரயில் பாதையில், மண்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்வதால், மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை வரும், 10-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அக்., 23ல் நள்ளிரவில் பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் – -ஊட்டி மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
தண்டவாளத்தின் மீது பெரிய பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்ததால், மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
கடினமான மலை பாதையில், ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறவில்லை.
இதனால், மேட்டுப்பாளையம – -ஊட்டி மலை ரயில் மற்றும் சிறப்பு மலை ரயில் வரும், 10-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டி – குன்னுார் மலை ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
