/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் மலை ரயில் தின கொண்டாட்டம்
/
ஊட்டியில் மலை ரயில் தின கொண்டாட்டம்
ADDED : அக் 15, 2025 11:04 PM

ஊட்டி: ஊட்டியில், 117வது மலை ரயில் தினத்தை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
சர்வதேச சுற்றுலா தலமான, ஊட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலை ரயில் உள்ளது. 1898ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை மலை ரயில் இயக்கப்பட்டது.
அதன் பின், 1908ம் ஆண்டு அக்., 15ம் தேதி முதல், ஊட்டி வரை மலை ரயில் இயக்கம் துவங்கியது. நூற்றாண்டை கடந்த மலை ரயிலுக்கு, 2005ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை நீராவி இஞ்சின் வாயிலாக மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மலை ரயிலின், 117வது தினம் ஒட்டி, ஊட்டி ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை நிர்வாகி நடராஜ், ரயில்வே அதிகாரிகள் மலை ரயிலில் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு, ரோஜாப்பூ மற்றும் கேக் வழங்கி வரவேற்பு அளித்தனர். மலை ரயிலின் சிறப்புகள் பற்றி சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.