தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முதுமலை அபயாரணயம் யானைகள் முகாம் மூடல்

 முதுமலை அபயாரணயம் யானைகள் முகாம் மூடல்

 முதுமலை அபயாரணயம் யானைகள் முகாம் மூடல்


ADDED : ஜூலை 27, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபயாரணயம் யானைகள் முகாம் மூடப்பட்ட நிலையில், அங்குள்ள, 7 வளர்ப்பு யானைகள், பாம்பக்ஸ் யானைகள் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு யானைகளுக்கு உணவு சமைப்பதற்காக சமையல் கூடம், பாகன்கள் தங்கி பணியாற்ற தற்காலிக செட்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

அபயாரணயம் யானைகள் முகாம் மூடப்பட்டதால், இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், வளர்ப்பு யானைகளை பார்க்க முடியாமல் ஏமாற்றுடன் செல் கின்றனர்.

துணை இயக்குனர் கணேசன் கூறுகையில், 'வளர்ப்பு யானைகள், பாம்பக்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டது.

ஏற்கனவே, பாம்பக்ஸ் யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்பட்டு, வளர்ப்பு யானைகள், அபயாரணயம் முகாமுக்கு மாற்றி பராமரிக்கப்பட்டு வந்தது.

தற்போது, அவை மூடப்பட்டு, வளர்ப்பு யானைகள் மீண்டும் பாம்பக்ஸ் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளது. யானைகளுக்கு தேவையான தண்ணீர், பசுந்தீவனங்கள் தடையின்றி கிடைக்கிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us