தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சட்டம் எல்லா பிரச்னைக்கும் தீர்வு தரும் மாநில சட்ட மைய இயக்குனர் பேச்சு

 சட்டம் எல்லா பிரச்னைக்கும் தீர்வு தரும் மாநில சட்ட மைய இயக்குனர் பேச்சு

 சட்டம் எல்லா பிரச்னைக்கும் தீர்வு தரும் மாநில சட்ட மைய இயக்குனர் பேச்சு


ADDED : ஜூலை 27, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மஞ்சூர்: சட்டங்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். என தமிழ் மாநில சட்டமைய இயக்குனர் வக்கீல் விஜயன் தெரிவித்தார்.

மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட அறிவூட்டு மன்றத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கவிதா, ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். என்.சி.சி., அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில சட்ட மையத்தின் இயக்குனர் வழக்கீல் விஜயன் பங்கேற்று பேசியதாவது, 'மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும்.

அது சமூகம், பொருளாதாரம், உடமை, உணவு, உறைவிடம், உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சார்ந்ததாகவும் வேறு வகையிலும் இருக்கலாம். பிரச்னை எந்த வகையை சார்ந்ததாக இருந்தாலும் அதற்கு தீர்வு தரும் ஒரே துறை சட்டம் மட்டுமே. சட்டம் ஒரு சர்வ நிவாரணியாக உள்ளது. சட்டங்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். இவ்வாறு, அவர் பேசினார்.

மாணவ, மாணவிகள் 261 பேருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

முடிவில் ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us