/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அலுவலக கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள்
/
அலுவலக கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள்
ADDED : ஜூன் 02, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே ஏலியாஸ் கடை பகுதியில், அரசு தேயிலை தோட்ட கழகமான 'டான்டீ' கார்டன் மருத்துவமனை கட்டடம் உள்ளது.
இந்த கட்டடத்தில், டான்டீ அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டடம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த கட்டடம் பொது சுகாதார துறைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரவு கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இங்கு இரவு காவலர் உள்ள நிலையில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளது குறித்து, சேரம்பாடி போலீசாரிடம் டான்டீ நிர்வாக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.