/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய அளவிலான தனித்திறன் போட்டி -மூன்று மாநில கல்லுாரி மாணவர்கள் அசத்தல்
/
தேசிய அளவிலான தனித்திறன் போட்டி -மூன்று மாநில கல்லுாரி மாணவர்கள் அசத்தல்
தேசிய அளவிலான தனித்திறன் போட்டி -மூன்று மாநில கல்லுாரி மாணவர்கள் அசத்தல்
தேசிய அளவிலான தனித்திறன் போட்டி -மூன்று மாநில கல்லுாரி மாணவர்கள் அசத்தல்
ADDED : பிப் 07, 2025 08:23 PM

பந்தலுார்; தேசிய அளவிலான மாணவர் தனித்திறன் போட்டியில், மூன்று மாநில கல்லுாரி மாணவர்கள், தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தினர்.
பந்தலுார் அருகே, தாளூர் பகுதியில், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர்களை ஒருங்கிணைத்து, 'தரங்க்' எனும் தேசிய அளவிலான மாணவர் தனித்திறன் போட்டிகள், துறை வாரியாக நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனைவர் பாலசண்முக தேவி வரவேற்றார். பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான ராசித் கசாலி தலைமை வகித்து பேசுகையில், ''ஒவ்வொரு மாணவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. அதனை வெளி கொண்டு வர, உந்து சக்தியாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
அந்த வகையில் தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களின், 50 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், ஒரே இடத்தில் தங்களது திறமைகளை காட்டுவதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. எனவே, படிக்கும் மாணவர்கள், படிப்பதோடு நின்றுவிடாமல் தாங்கள் படித்த, துறை வாயிலாக அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி, தங்களின் வாழ்வில் உயர்வான இடத்திற்கு செல்ல முன் வர வேண்டும்,'' என்றார்.
தனித்திறன் போட்டியில், 'சைகை மற்றும் கம்ப்யூட்டர் வாயிலாக செயல்படும், ரோபோ, தானியங்கி டிரோன்கள், ஒருங்கிணைந்த மனித உருவத்தை வெளிக்காட்டும் கருவிகள்,' உள்ளிட்ட பல்வேறு, அறிவியல் சார்ந்த படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.
மேலும், கவிதை, வினாடி வினா, பேச்சு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களின் படைப்புகளை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். துணை முதல்வர் ரஞ்சித், கல்லுாரி டீம் மோகன் பாபு, கல்லுாரி மேலாளர் உம்மர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் அனந்தகிருஷ்ணன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் பேராசிரியர் முகமது சிராஜுதீன் மற்றும் மாணவர்கள், கல்லுாரிகள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இசை கச்சேரி நடத்தப்பட்டது.